search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டத்துறை அமைச்சர்"

    • மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
    • உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆவர்.

    உச்சநீதிமன்றத்தில் 80,000 வழக்குகள் உட்பட நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் ஐந்து கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.

    இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறுகையில், "டிசம்பர் 1ம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள 5,08,85,856 வழக்குகளில், 61 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 25 உயர் நீதிமன்றங்களில் உள்ளன.

    மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 4.46 கோடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

    இந்திய நீதித்துறையின் ஒட்டுமொத்த அனுமதிக்கப்பட்ட பலம் 26,568 நீதிபதிகள். உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட பலம் 34 நீதிபதிகள் ஆகவும், உயர் நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலம் 1,114 ஆகவும் உள்ளது.

    மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்களில் 25,420 நீதிபதிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.

    • சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    • தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    cசென்னை, கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்காக வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் பாஜகவினரின் சதித்திட்டம் என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு எரிபொருள் நிரப்பிய புட்டியை வீசிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ள வினோத்தை சிறையில் இருந்து பிணையில் எடுத்த வழக்கறிஞர் பாஜக-வில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    ஏற்கனவே பாஜக அலுவலகம் முன்பு இதே போல் தாக்குதல் நடத்தி இருக்கும் இந்த வினோத்தை, பாஜக வழக்கறிஞரே பிணையில் எடுத்துள்ளது வேறொரு சந்தேகத்தை கிளப்புகிறது.

    இந்த கோணத்திலும் தமிழ்நாடு காவல்துறை தீவிரமாக தனது விசாரணையை விரிவுபடுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    ×